கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் இன்று (10) தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் பரவல் குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளை நேற்று (09) பாராளுமன்றில் தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மரிக்கார், தண்ணீரில் கொவிட் தொற்றாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி புள்ளே கூறினார். அப்படியென்றால் இப்பொழுதாவது அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு நாம் பிரதமரிடம் கேட்கின்றோம்.

பிரதமர் – ” அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும்” என்றார்.