புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நீதிபதிகளுக்கு நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மற்றும் அவர்கள் இதற்கு முன்னர் வகித்த பதவிகள் பின்வருமாறு…

என்.கே.டீ.கே.ஐ. நாணாயக்கார – மாவட்ட நீதிபதி
ஆர்.எல்.கொடவெல – மாவட்ட நீதிபதி
வீ.ராமகமலன் – மாவட்ட நீதிபதி
யூ.ஆர்.வீ.பீ. ரணதுங்க – மாவட்ட நீதிபதி
எஸ்.எச்.எம்.என். லக்மாலி – மேலதிக மாவட்ட நீதிபதி
டீ.ஜி.என்.ஆர். பிரேலமரத்ன – மாவட்ட நீதிபதி
டபிள்யூ.டீ.விமலசிறி மேலதிக மாவட்ட நீதிபதி
எம்.எம்.எம். மிஹால் பிரதான நீதவான்
மஹீ விஜேவீர – மாவட்ட நீதிபதி
ஐ.பி.டி.லியனகே – மேலதிக மாவட்ட நீதிபதி
ஜே.ட்ரோ.டிஸ்கி – மாவட்ட நீதிபதி
என்.ஏ.சுவன்துருகொட – அரச சிரேஷ்ட சட்டத்தரணி