வவுனியா – ஓமந்தை, நவ்வி பகுதியில், 7 வயது பாடசாலை மாணவனான ப.அபிசாந் நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது மரணத்துக்கு நீதி கோரி, கிராம மக்கள் இன்றையதினம் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சிறுவனுடன் விளையாடிய அயல்வீட்டு சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முரணான தகவல்களை, அவர் தெரிவித்திருந்தார்.
முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாக முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றில் விழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அந்தச் 
சிறுவனை கைதுசெய்த ஓமந்தை பொலிஸா நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் இறுதிகிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று காலை இடம்பெற்று சடலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வவுனியா – ஓமந்தை, நவ்வி பகுதியில், 7 வயது பாடசாலை மாணவன் நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது மரணத்துக்கு நீதி கோரி, கிராம மக்கள் இன்றையதினம் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

சிறுவனுடன் விளையாடிய அயல்வீட்டு சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முரணான தகவல்களை, அவர் தெரிவித்திருந்தார்.

முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாக முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றில் விழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அந்தச் சிறுவனை கைதுசெய்த ஓமந்தை பொலிஸா நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் இறுதிகிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று காலை இடம்பெற்று சடலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள், வீதியில் சடலத்தினையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதன் உண்மைதன்மையும் நீதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

H