உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இன்றைய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஜனாதிபதியிடம் தான் கோரியுள்ளபோதிலும், இதுவரை அது தனக்குக் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.