கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளகல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மாவட்ட ரீதியில் பரீட்சை நிலையங்களை அமைப்பதற்கு பரீட்சை திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

அவ்வாறான மாணவர்கள் சிகிச்சை நிலையத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்ற முடியும் என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவ்வாறான இடங்களை சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அனுதியுடன் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக,  அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வகுப்பறையொன்றை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி 4513 நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.