புதிய வகை கொவிட் வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அரச வைத்தியதிகரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறினார்.

´நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு புதிய வீரியம் கொண்ட வைரஸ் பரவக் கூடும் என ஜயவர்தனபுர அய்வுக்கூட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 800 இல் இருந்து 1200 வரை அதிகரிக்க கூடும். எனவே இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்.´என்றார்.