பேராதனைப்  பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டில் கல்விப் பயிலும் 08 மாணவர்களுக்கு, கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மேற்படி பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின்  பிசிஆர் முடிவுகளுக்கமைய 08 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான மாணவர்கள் பொல்கொல்ல கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்புடைய 250 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.