நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 7 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளன. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்  இதனை குறிப்பிட்டுள்ளது.

கொத்தட்டுவை பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண், அங்கொடை பகுதியை சேர்ந்த 72 வயதுடைய பெண், குருநாகல் பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்,
மஹவெல பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஆகியோர் உயிரிழந்தனர்.

அத்துடன், பேராதனை பகுதியை சேர்ந்த 82 வயதான பெண், கம்பளை பகுதியை சேர்ந்த 51 வயதான பெண் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த 79 வயதான பெண் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.