கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீள அறிவிக்கும் வரையில் பாடசாலைகளின் விஷேட நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது