கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்நிலையில்,  பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் ஷன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டார்.

அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று  வழங்கிவைக்கப்பட்டது.