கொழும்பு மாவட்டத்தில் கொவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 722 கொரோனா தொற்றாளர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 160, இரத்தினபுரியில் 75 பேரும், கண்டியில் 49 பேரும், குருநாகலில் 29 பேரும், களுத்துறையில் 25 பேரும், பதுளையில் 38 பேரும், மாத்தளையில் 14 பேரும், காலி மாவட்டத்தில் 12 பேரும், கிளிநொச்சியில் 10 பேரும், அநுராதபுரத்தில் 08 பேரும், மாத்தறையில் 06 பேரும் ஏனைய மாவட்டங்களில் தலா 4,3, 2 என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம் முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினத்தில் நாட்டில் 13,585 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் 722 கொரோனா தொற்றாளர்கள் பதிவான நிலையில் மொத்தமாக 77,906 தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் 71,176 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் தொடர்ந்தும் 6,321 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.