கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையுடன் விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த டுபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ப்ளை டுபாய் (Fly Dubai) விமான சேவையின் முதலாவது விமானம் 58 பயணிகளுடன் டுபாயிலிருந்து இன்று அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 166 பயணிகளுடன் இன்று அதிகாலை 1.50 மணிக்கு மீண்டும் டுபாய் நோக்கி புறப்பட்டது.

ப்ளை டுபாய் (Fly Dubai) விமான சேவை வாரத்திற்கு இரண்டு தடவை (செவ்வாய் மற்றும் வியாழன்) அதிகாலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)