அம்பாறை பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (19) மதியம் 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொத்துவில் சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன் சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் எது விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இதேவேளை, தமக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.