கொவிட் 19 இரண்டாவது அலை ஆரம்பமானதை தொடர்ந்து இதுவரை மேல் மாகாணத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிககை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் 225 தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து மேல் மாகாணத்தில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,181 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொழும்பு மாவட்;டத்தில் 28,440 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 15,759 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 5,982 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய மாகாணத்தில் 6,216 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் கண்டி மாவட்டத்தில் 4,597 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 864 தொற்றாளர்களும் மற்றும் நுவரெலியாவில் 755 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

தென் மாகாணத்தில் 3,648 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 3,182 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,186 பேரும் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.