மேலும் 500,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை அடுத்தவாரம் இலங்கைக்கு வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை இரவு குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.