ரயில்வே ஊழியர்கள் இன்று (22) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் எஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பலவற்றை சேர்ந்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் ஓமந்தைக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள ரயில் மார்க்க வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை  முன்னெடுக்கவுள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கம் கூறியுள்ளது.