புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் நடுப்பகுதி வரை புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

தற்போது இரண்டு புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கை பிரஜைகள் அல்லாதவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வௌிநாட்டு கட்சியொன்றை இலங்கையில் பதிவு செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.