ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (22) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தாம் தயாரான நிலையில், இன்று (23) முற்பகல் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை போக்குவரத்து அமைச்சர் வழங்கியுள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறியுள்ளார்.

தங்களின் கோரிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடி, தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என போக்குவரத்து அமைச்சர் தொலைபேசியூடாக நேற்றிரவு அறிவித்ததாக இந்திக தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று முற்பகல் 11.30 மணியளவில் கலந்துரையாடல் ஆரம்பிக்கவுள்ளமையால் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.