இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ்,  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு, இன்று (24) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, நூலகத்தில் வைத்து யாழ்.மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணனையும்  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தூதுவர், பல தரப்பினரையும் தொடர்ச்சியாக  சந்தித்துவரும் நிலையிலேயே, நூலகத்துக்கும் விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது