இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று(24)  நடைபெற்ற கலந்தரையாடலின்போதே,  இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இச்சந்திப்பு பலனளிக்கும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழில்நுட்ப அறிவு குறித்தும் இருநாட்டு தலைவர்கள் கருத்துகளை பரிமாற்றிக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானின் விவசாய பொருளாதார செயற்பாடுகள் இலங்கையுடன் ஒத்துள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.