வவுனியா – கூமாங்குளம் பகுதியில், இன்று (25) காலை, இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் ( 31 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (24) வீட்டில் இருந்தநிலையில், இன்று காலை அவரது வீட்டு முற்றத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.