நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும், அவர்களின் சகல தரவுகளையும் உள்ளடக்கி தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் இதனை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைககுழு பரிந்துரை செய்துள்ளது.

உலகின் பல நாடுகள் இலத்திரனியல் அடையாள அட்டைகளை அறிமுகம் செய்துள்ளமை குறித்தும், ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.