கொவிட் 19 தொற்றுக்குள்ளான 464 பேர் நேற்று(27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான 4,053 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றிலிருந்து இதுவரை 78,373 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.