கிழக்கு மாகாணத்தில் இன்று (02) காலை நிறைவடைந்த கடந்த 12 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் அண்மைக்காலமாக தொற்றுக்களின் வேகம் குறைவடைந்துவந்தது. ஆனால், கடந்த 12 மணிநேரத்துள் திடீரென தொற்றின் வேகம் கூடியுள்ளது.

குறிப்பாக, அதிகூடியதாக மட்டக்களப்பில் 10 பேரும் காத்ததான்குடியில் 07 பேரும் ஏறாவூர் மற்றும் கல்முனை வடக்கில் தலா 06 பேரும் தமனயில் 05 பேரும் அம்பாறையில் 04 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கிழக்கில் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை 3,000ஜ தாண்டியுள்ளது. அங்கு இன்று (02) 3,018 ஆகியது. அதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் 1,394 ஆக உயர்ந்தது.

எனினும், கிழக்கில் தற்போது 8 வைத்தியசாலைகளிலும் 149 பேரே சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, அம்பாறை,  உகனை, காத்தான்குடி, கிண்ணியா, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம்  22 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

அதிகூடிய 04 மரணங்கள், அட்டாளைச்சேனையில் சம்பவித்துள்ளதுடன், காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் தலா 3 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.