யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் 09 மாதக் குழந்தையை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதான தாயை, குழந்தையுடன் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை, நன்னடத்தைப் பிரிவில்  வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்  இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தாயின் மனநல அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.