புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை கூறியுள்ளார்.

இதன்பின்னர், தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் நேற்றுடன் (02) முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.