ஜேர்மனியில் வதியும் பவானந்த் பரத்ராஜ் அவர்கள் தனது பதினேழாவது பிறந்தநாளை (03.03.2021) முன்னிட்டு, சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மந்துவில் RCTMS பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ரூ26,000/- நிதியுதவியினை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஜேர்மன் நாட்டுக் கிளையின் மூலம் வழங்கி வைத்துள்ளார்.

பாடசாலை அதிபர் திரு. நடராஜா தமிழ்ச்செல்வன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. ஆ. சிவகுமாரன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய பாடசாலையில் கல்வி கற்கும் மிகவும் வறுமை நிலையில் காணப்படும் பத்து மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் பாடசாலை நிர்வாகம் பயன்படுத்தும் பிறின்ரருக்கான ரோனர் ஆகியவையை வழங்கவும், மாணவர்களின் துவிச்சக்கரவண்டித் தரிப்பிடத்திற்கு தளம் அமைத்துக் கொடுக்கவும் மேற்படி பயன்படுத்தப்படுகிறது.

03.03.2021 அன்று பாடசாலையில் நடைபெற்ற உதவி வழங்கும் வழங்கும் நிகழ்வில், புளொட் அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான திரு. பா. கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் திரு. செ. மயூரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.