நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில், இன்று (08) அதிகாலை இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு,   சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 குறித்த இந்து மயானத்தில், இன்று அதிகாலை, பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக, இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளதுடன், குறித்த பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.