அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(09) ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, உறுப்பினர்களான சந்திரசிறி, சந்ரா பெர்னாண்டோ மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவால் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட முறைப்பாடுகள் பலவற்றில், பொறுப்புகூற வேண்டிய நபராக தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.