21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு நேற்றுக் காலை சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ஸன், கஜன் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றபோது, புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.