மேல் மாகாணத்திலிருந்து அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு வருபவர்களை பிசிஆர்  பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது.

கினிகத்தேனை கலுகலைப் பகுதியில் தினமும் 50 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார காரியாலயம் அறிவித்துள்ளது.

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகவே, இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.