கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் அழகியல் துறைசார் கற்கை நெறிகளுக்கான செயன்முறை பரீட்சையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஜூன் மாதமளவில் பரீட்சை பெறுபேறுகளை வௌியிட்டு, ஜூலை மாதமளவில் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு இயலுமென கல்வியமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.

10 நாட்களாக நடைபெற்ற 2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைந்தது