தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறை சார் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாய் என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சரின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாயாகும்.

அத்துடன், வரவு – செலவுத் திட்ட  கொடுப்பனவான 100 ரூபாயும் சேர்த்து நாளாந்த ஊதியம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.