200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக, தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தைப் போன்று பௌதிக மற்றும் மனித வளம் தொடர்பில் நிலவும் முறன்பாடுகள் இதற்கு காரணமாகும் என்று அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் இரண்டாம் நிலை பாடங்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்பதும் மற்றுமொரு பிரச்சினையாகும். இந்த பிரச்சினைகளுக்கு ´விரைவான தீர்வைக் காண வேண்டியதன்´ அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.