கண்டி புகையிரத நிலையத்தில், தமிழ் மொழியில்  ஒலிபரப்பப்படும் பயணிகளுக்கான அறிவித்தல்கள், தெளிவில்லாமல் இருப்பதாக, பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிங்களம், ஆங்கில மொழிகளில் ஒலிபரப்பப்படும் பயணிகளுக்கான அறிவித்தல்கள் மிகவும் துள்ளியமாகவும் விளங்கக்கூடியதாகவும் இருப்பதாகவும் எனினும் தமிழ்மொழி அறிவித்தல் மாத்திரம் தெளிவில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், தங்கள் பயணம் தொடர்பாக பயணிகள் பாரிய சிக்கலான நிலைக்குத் தள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்