எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் புதிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான அனைத்து தரவுகளும் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் W.M.M.B. வீரசேகர தெரிவித்துள்ளார்.

விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில், தற்போது காணப்படும் பிறப்புச் சான்றிதழை புதுப்பித்து புதிய சான்றிதழைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பதிவாளர் நாயகம் கூறியுள்ளார்.