முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பொலிஸார் உள்ளிட்ட மூவரை முல்லைத்தீவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்குகளின் சான்றுப்பொருள்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் உள்ளிட்ட மூவரே இவ்வாறு  இன்று(14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தில் வைக்கப்பட்ட வழக்குகளின் சான்றுப்பொருள்களை திருடியதாக இவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் குறித்த கட்டடத்தில் வைக்கப்பட்ட வழக்குகளின் சான்றுப்பொருள்கள் தொடர்பில் விவரங்களை பரீசீலனை செய்துகொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.