நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2020 க.பொ.த.சா.த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்றன.

நீண்டகால விடுமறைக்குப்பின்னர் மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05,11 மற்றும் 13 ஆம் தர வகுப்புகளும் இன்று ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05, 11,13 ஆம் தரங்களை தவிர்ந்த ஏனைய தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. இதற்கமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும் தரம் 06 தொடக்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்று திறக்கப்படும் பாடசாலைகள் யாவும் சித்திரைப்புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா அறிவித்துள்ளார்.