இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 307 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 25 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியோர் என செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 50 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 47 பேரும் கண்டி மாவட்டத்தில் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில் 09 நபர்களும் யாழ். மாவட்டத்தில் 07 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூவரும் பதுளை மாவட்டத்தில் இருவரும் வவுனியா மாவட்டத்தில் இருவரும் நுவரெலியா மாவட்டத்தில் ஒருவரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (15) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 87,907 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, 84,648 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

 

நாட்டில் நேற்றைய தினம் (14) மேலுமொரு கொரோனா மரணம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது.