கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட ஒப்புதலை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக, இந்தியாவின் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதானி நிறுவனம்;, அபிவிருத்திக்காக 51 சதவீத பங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபை ஒப்புதல் குறித்த கடிதத்தை தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து, கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக, அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.