சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் மத்தியில் வசிக்கின்ற காணியற்ற குடும்பங்களுக்கு பகிந்தளிக்கப்பட்ட  சொந்த காணிகளுக்கான ஆவணங்களை இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

கொடிகாமம் திருநாவுக்கரசு நாயனார் மடாலயத்திற்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற சுமார் 11 குடும்பங்களுக்கு எமது சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் மயூரனின் முயற்சியின் மூலம் குறித்த காணிகள் சொந்த நிலமற்ற அம்மக்களுக்கு பகிந்தளிக்கப்பட்டது.

குறித்த காணிகளுக்குரிய ஆவணங்களை புளொட் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான  ன தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், திருநாவுக்கரசு நாயனார் மடாலய தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஏகாம்பரநாதன் ஆகியோர் இணைந்து மக்களிடம் வழங்கி வைத்தனர்.