தலைமன்னார் – பியர்  பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம்    தனியார் பஸ்,  ரயில் மோதி ஏற்பட்ட விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை,  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இவ்விபத்தில் உயிரிழந்த தலைமன்னார் – பியர் பகுதியை சேர்ந்த   பாலசந்திரன் தருண் (வயது-14)  என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவனின் இல்லத்தில் இன்று புதன் கிழமை    அஞ்சலி இடம்பெற்றது.

பொது மக்களின் அஞ்சலியின் பின்னர், இன்று  மாலை 3 மணியளவில் தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.