ரயில் என்ஜின் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என, ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய  மாலை நேர ரயில் சேவைகள் தாமதிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அசாதாரண செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள்  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளளனர் என, ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.