நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 283 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 86,227 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 89,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அவர்களில் 2,410 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 538 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் (18) ஒரு COVID மரணம் பதிவானது. இப்பாகமுவ பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே நேற்று உயிரிழந்தார்.