மட்டக்களப்பு, வாழைச்சேனை – திருகோணமலை வீதியிலுள்ள கதிரவெளிப் பகுதியில் மோட்டர் சைக்கிளொன்று, வீதியை விட்டுவிலகி, மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளர் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் வாகரையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆனந்தராஜா பார்த்தீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.