கிளிநொச்சி முகமாலை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு, சிறுவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவில்  பகுதியில் கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேற்று (26) )இரவு மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் வாகனத்தில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காரைச் செலுத்திச் சென்ற தந்தையார் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மக்கேணியைச் சேர்ந்த சற்குணம் சாரங்கன் மற்றும் சற்குணம் சாருஜன் ஆகிய 12, 09 வயது சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.