தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேம்படுத்தும் வகையில், இணையத்தளங்கள் மற்றும் யூடீப் செனலில் தகவல்களை ஏற்றிய இருவரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரில் இணையத்தளம் மற்றும் யூடீப் செனலை நடத்திச் சென்ற இடம் அடையாளம் காணப்பட்டு அந்த இடம் இன்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அந்த இடத்துக்கு பொறுப்பாக இருந்த குறித்த  35 வயது பெண், 36 வயது ஆண் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், கணினிகள் 05 மற்றும் மடிக்கணினிகள் 05 உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கொழும்புக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்