வவுனியா கணேசபுரம் முன்பள்ளி சிறுவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும்  கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.00மணியளவில் நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியின் ஐந்தாம் கட்ட மற்றும் இறுதி நிகழ்வாக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்பள்ளியின் பொறுப்பாசிரியை செல்வேந்திரன் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன் (சிவம்), கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இ.பரிஹரன்,

கணேசபுரம் திருநாவுக்கரசர் முன்பள்ளி ஆசிரியை அ.மோகனச்செல்வி, கணேசபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் செ.ராதாகிருஷ்ணன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தக்ஷீர்,

பிரதேச முன்பள்ளிகளின் இணைப்பாளர், பிரதேச முன்பள்ளிகளின் உதவி இணைப்பாளர், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம், கணேசபுரம் இளைஞர் கழக தலைவர் எஸ்.தனுசன்,

சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் முன்பள்ளி சிறுவர்களின் பெற்றோர் கலந்து கொண்டிருந்தார்கள்.