கொழும்பு நகரில், தூண்கள் மேல் ஓடும் புதிய ரயில் கட்டமைப்புகளை நிர்மாணிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு நகரை மையப்படுத்தி, அரச மற்றும் தனியார்த் துறையினர் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக 4 ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

சிவப்பு, பச்சை, நீலம், நாவல் ஆகிய நான்கு வர்ணங்களில் இந்த நான்கு ரயில் பாதைகளும் பெயரிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த அவர், 42 கிலோ மீற்றர் நீளமுடைய சிவப்பு ரயில்  பாதை, ராகம முதல் புறக்கோட்டை ஊடாக கொட்டாவை வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.

28 கிலோ மீற்றர் நீளமான பச்சை ரயில் பாதை, மொரட்டுவை முதல் நாரஹேன்பிட்டி ஊடாக களனி வரையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

23 கிலோமீற்றர் நீளமான நீல ரயில் பாதை, கொட்டாவை முதல் இசுறுபாய ஊடாக ஹுனுபிட்டிய வரை  நிர்மாணிக்கப்படவுள்ளது.

நான்காவது நாவல் ரயில் பாதை, துறைமுக நகர் முதல் பொரளை ஊடாக அத்துருகிரிய வரையில் நிர்மாணிக்கப்படும் என்றும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.