Header image alt text

மன்னாரின் முன்னாள் ஆயர் இராஜப்பு சின்னப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். Read more

01.04.1993 அன்று வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கரன் (வீரபுத்திரன் இன்பரவி – கடுக்காமுனை),  காளிதாஸ் (அங்குசாமி சந்திரமோகன் – ஏறாவூர்), மதன் (கிறிஸ்டியான் ஜெபஸ்டியான் – கல்லடி) ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

நாட்டில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று (31) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக COVID-19 கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். Read more

வவுனியா – இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து, முஸ்லிம் இளைஞன் ஒருவர், நேற்றிரவு (31) வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார். Read more

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரென அறியப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமினின் போதனைகள் மற்றும் பிரிவினைவாத சிந்தனைகளை பிரசாரம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவர், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற 15 மில்லியன் ரூபாய் மோசடியில் இவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

யாழ். மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொவிட்- தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின் பிரகாரம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.